இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய திருமதி தாமரைச்செல்வி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவி கயல்விழி அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பள்ளியில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்துதுதல் வேண்டும் என்றும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வருகை தராத மாணவர்களின் பெற்றோரை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மாணவர் படிப்பை தொடர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும், சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கு விருது வழங்கப்படுகிறது என்றும், உயர் கல்வி வழிகாட்டல் நான் முதல்வன் திட்டம் பற்றி எடுத்து கூறப்பட்டது.


மேலும் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு மாணவர்களை வரவழைக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இப்பள்ளியின் ஆசிரியர் கொடியரசு அவர்கள் நன்றி உரை கூறினார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் பிரியதர்ஷினி அவர்கள் செய்திருந்தார்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment