சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் போராட்டத்தில் புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் மீட்கப்பட்டார். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 23 June 2023

சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் போராட்டத்தில் புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் மீட்கப்பட்டார்.


மதுரை சேர்ந்த ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த், இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு திரும்பியபோது மேலப்பன்சாவடியில் காலை மர்ம நபர்களால் கத்தி முனையில் தேவ் ஆனந்த் கடத்தப்பட்டார். இதை எடுத்து அவர்கள் நண்பர்கள் அளித்த புகார் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதனைஅடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமாக வந்த காரைஷபோலீசார் தடுத்து சோதனை நடத்தியதில் தேவ் ஆனந்த் கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவரை  உடனடியாக மீட்ட போலீசார், கடத்தல் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர், முத்துப்பாண்டி, முத்து,  சென்னையைச் சேர்ந்த கருப்பசாமி காஞ்சிபுரம் மாவட்டம் மாடப்பாக்கம் கூடுவாஞ்சேரியை சுவாமிநாதன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.


முதல் கட்ட விசாரணையில்  தேவ் ஆனந்தின் சகோதரர்  சிரஞ்சீவி தொழில் நிமித்தமாக இரண்டு பேரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், இதற்காக அவர் கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் சென்னையில் கடத்தப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.


 

No comments:

Post a Comment

Post Top Ad