மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள், பள்ளிக்கே செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்து நீண்ட நாட்கள் வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் தொடர்பான ஒன்றிய அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டார வள மையத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு. செழியன் தலைமையில் தொடங்கியது.


அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு திருமதி மகாலட்சுமி அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment