புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும், அதேபோல் இன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்கள் என மொத்தம் 10 பயனாளிக்களுக்கு ரூ.1,35,000. மதிப்பில் தக்க செயலியுடன் கூடிய திறன்பேசி (Smart Phone) மாவட்ட ஆட்சியர் திருமதி. ஐ. சா. மெர்சி ரம்யா,. இ. ஆ. ப,. உத்தரவிற்கினங்க, திரு. சரவணன், DRO நிலம் எடுப்பு -தேசிய நெடுஞ்சாலை அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்வில் திரு. சரவணன், தனித்துணை ஆட்சியர் (ச. பா. தி ) திருமதி. ரம்யாதேவி, DRO -நிலம் எடுப்பு -வைகை குண்டாறு. செல்வி. ஜெயஸ்ரீ, துணை ஆட்சியர் -பியிற்சி ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஏற்பாடுகளை, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலக முடநீக்கு வல்லுநர் திரு. ச. ஜெகன்முருகன் அவர்கள் செய்திருந்தார்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment