மணமேல்குடி ஒன்றியத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எண்ணம் எழுத்தும் இரண்டாம் நாள் பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடராஜன் அவர்கள் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் தொடக்கநிலை சண்முகம் ஆகியோர் பயிற்சியினை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. பயிற்சியின் போது மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் திருமதி இந்திராணி ஆகியோர் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் உடன் இருந்தனர்.


ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியானது மாணவர்களுக்கு 100% சென்றடைய வேண்டும் என்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறனை வளர்ப்பதற்கும் ஆசிரியர்கள் தங்களுடைய கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment