புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியை சேர்ந்த பழனியப்பன் (வயது 54) என்பவரும் அவரது தாயார் சிகப்பி (வயது 75) என்பவரும் கடந்த 23.12.2022 அன்று அவரது வீட்டில் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள் கொள்ளயடிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.


இந்நிலையில் 02.05.2023 அன்று தனிப்படை போலீசார் சக்திவேல் (வயது 33) மற்றும் அலெக்சாண்டர் (வயது 36) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், நகைக்காக அந்தக் கொலைகள் செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப., மற்றும் தனிப்படை போலீசாரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளித்து பாராட்டினார்.
_எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment