பொன்னமராவதி அருகே காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 27 May 2023

பொன்னமராவதி அருகே காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும்: தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குநர் டிஜிபி.அபாஷ்குமார் இ.கா.ப., அவர்களுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளானர், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் சுற்றுவட்டார பகுதியான ஒலியமங்களம், எம் உசிலம்பட்டி, மேலத்தானியம், கீழதானியம், முள்ளிப்பட்டி, இடையாத்தூர், கொன்னையம்பட்டி, ஆலம்பட்டி, நல்லூர், கூடலூர், அரசமலை, மறவாமதுரை, சேரனூர், நெருஞ்சிகுடி, காரையூர் உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

இப்பகுதிகளில் ஏதேனும் தீ விபத்து,ஆடு,மாடு கிணற்றில் விழுந்தாலும், வீடுகளுக்குள் பாம்பு புகுந்தாலும் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அப்பகுதி பொது மக்கள் பொன்னமராவதி மற்றும் இலுப்பூர் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் உள்ளதாகவும்.எனவே காரையூர் பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குநர் டிஜிபி.அபாஷ் குமார் அவர்கள் இப்பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று காரையூர் கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


_எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

No comments:

Post a Comment

Post Top Ad