பொன்னமராவதி ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி, நகர செயலாளர் அழகப்பன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்கள். ஒன்றிய நகர நிர்வாகிகள் பாண்டியன், பழனிச்சாமி, விஜயா, சுப்பையா, மணி, சிக்கந்தர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

திமுக தலைமை கழக பேச்சாளர் கோதை மதிவாணன் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் பற்றி மக்களிடையே விளக்கி பேசினார். இப்பொதுக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், வேந்தன்பட்டி விஜயகுமார், இளைஞரணி இளையராஜா, திருமயம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலவயல் முரளிசுப்பையா, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராமு, மாவட்ட விளையாட்டு பிரிவு ஆலவயல் சாமிநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மகேஸ்வரி மலைராஜா, பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செவலூர் திவ்யா முத்துக்குமார், மேலைச்சிவபுரி மீனாள் அயோத்திராஜா, மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், மேலைச்சிவபுரி கிளை செயலாளர் கிளை கழக நிர்வாகிகள் சிவ.சின்னையா, சக்திவேல், மணிமுத்து, பழனியப்பன், வெள்ளைச்சாமி, சிதம்பரம், தமிழ்செல்வன் நாகராஜ், கம்பர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என இருநூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment