புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, திருக்களம்பூர் முத்தமிழ் மன்றம், வள்ளல்பாரி நற்பணி மன்றம், அண்ணா நகர் தச்சம்பட்டி, குமாரபட்டி அரசனம்பட்டி, நெடுவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பூத்தட்டுக்களையேந்தி வந்து கொடியேறி அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவை சிறப்பாக நடத்தினர்.

முன்னதாக கதலிவனேஸ்வரர் ஆலயத்திலிருந்து பூத்தட்டு மற்றும் பால்குடம் புறப்பட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக கருப்பர் கோவில், வீரபத்திரர், அங்காளம்மன், ஆண்டி உள்ளிட்ட ஆலயங்கள் வழியாக வலம் வந்து, கொடியேறி அம்மன் ஆலயம் வந்தடைந்து அம்மனுக்கு அபிசேகம் செய்து பூச்சொரியும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன், விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்களம்பூர் கிராம நிர்வாக கமிட்டியார்கள் செய்திருந்தனர் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் திரு.தனபாலன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment