பொன்னமராவதி ஒன்றியம் சித்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 May 2023

பொன்னமராவதி ஒன்றியம் சித்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கூடலூர் அருகே உள்ள சித்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடத்தப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் இராமதிலகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு நல்ல நாகு ஆகியோர் ஆலோசனையின்படி சித்தூர் கிராமத்தில் தொடங்கிய மாணவர்களுக்கான ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா ஊராட்சி மன்றத் தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். 

முன்பாக ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவினை இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் கல்பனா தேவி, பவிதா, இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.இதில் அறிவியல் ஆர்வம் கொண்ட இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் இப்பயிற்சியில் மாணவச்செல்வங்களுக்கு அறிவியல் தொடர்பான எளிய அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் அற்புதங்கள், கணித விளையாட்டுகள்,சமையல் அறையில் அறிவியல், விளையாட்டு கள் மற்றும் கதைகள், கற்பனை  திறன் மற்றும் செயல்பாட்டுத் திறன், உள்ளூர் வரைபடம் வரைதல் போன்ற தலைப்புகளில் பயிற்சியினை வானவில் மன்ற கருத்தாளர்களர்கள் காவியா, அப்ரீன்பானு, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கோகிலா, ரம்யா,சங்கீதா ஆகியோர் பயிற்சியின் முக்கியத்துவத்தினை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். 


இப்பயிற்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

No comments:

Post a Comment

Post Top Ad