மணமேல்குடி ஒன்றியத்தில் இடைநின்ற 11-ஆம் வகுப்பு மாணவன் சதீஸ்வரன் 11 & 12ம் வகுப்பு இரண்டு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் எழுதி தேர்ச்சி பெற்று சாதனை. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 May 2023

மணமேல்குடி ஒன்றியத்தில் இடைநின்ற 11-ஆம் வகுப்பு மாணவன் சதீஸ்வரன் 11 & 12ம் வகுப்பு இரண்டு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் எழுதி தேர்ச்சி பெற்று சாதனை.


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வழிகாட்டுதலின் படியும், மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குடியிருப்புகளில் பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுக்கும் பணியில் கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சதீஸ்வரன் என்ற மாணவன் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்ததை கண்டறியப்பட்டது.

மாணவனை விசாரித்ததில் தன்னுடைய தந்தை பதினொன்றாம் வகுப்பில் இறந்ததினால் குடும்ப வருமானத்திற்காக தன்னுடைய படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றதாகவும் குடும்பத்தில் அம்மா மட்டுமே உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளார்.  என்னுடன் கூட பிறந்தவர்கள் மூன்று பேர் உள்ளார்கள்.


ஆகையால் வருமானத்திற்கு பணம் இல்லாமல் இருந்ததினால் நான் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததினால் படிப்பை நிறுத்தினேன் என்று கூறினார். ஆகையால் மாணவனின் குடும்ப வறுமையினை அறிந்து மணமேல்குடி வட்டார வளமையத்தில் பணியாற்றக்கூடிய மேற்பார்வையாளர் பொறுப்பு பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர் திரு. முத்துராமன் திருமதி அங்கையற்கண்ணி  ஆகியோர் இணைந்து மாணவனின் அம்மாவிடம் பேசி கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்து பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அனுப்பி வைத்தார். மாணவன் படிப்பதற்கு ஆர்வம் தெரிவித்தான்.


ஆகையால் மாணவனை பன்னிரண்டாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு அவனுக்கு சைக்கிள் பாட புத்தகங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு காளியப்பன் அவர்கள் மாணவன் கல்விக்கு வழிகாட்டினார்கள். மேலும் மாணவனின் குடும்பத்திற்காக மாதந்தோறும்  உதவியாக சிறிய தொகை ஏழு மாதங்களாக ஏப்ரல் வரை குடும்பத்திற்கு வட்டார வளமைய பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. 


இந்நிலையில் சதீஸ்வரன் அறிவியல் பாடப் பிரிவில் நன்றாக படித்து தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குடும்ப வறுமையிலும் தன்னுடைய குடும்பத்தினையும் பார்த்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி இன்று இரண்டு வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருப்பது மாணவனின் தன்னம்பிக்கையை காட்டுகிறது. ஆகையால் மாணவனுக்கு உயர்கல்வி படிப்பதற்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் உதவிகள் செய்தால் நன்றாக படித்து ஒரு மிகச்சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என நம்புகிறோம். 


பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வினை ஒரே நேரத்தில் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


_எம். மூர்த்தி, மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad