புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், ஒன்றிய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமசுப்புராம் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார, நகர,கிராம காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிட இயக்கத்தினர், விடுதலை சிறுத்தை கட்சியினர் என பலர் கலந்து கொண்டு கண்டன குரல் கொடுத்தனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. செய்தியாளர், புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment