புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு மூன்றாவது நாள் மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நிறைவு நாள் பயிற்சியில் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப். திரு ஜோன்ஸ் மற்றும் திரு. கோபிந்த் ஆகியோர் கலந்து கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான விரிவான தகவல்களை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

பயிற்சியின் நிறைவு நாளில் வட்டார கல்வி அலுவலர் செழியன் மற்றும் திருமதி இந்திராணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் கருத்தாளர்கள ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சியினை நிறைவு செய்தனர். சிறப்பாக பணியாற்றிய கருத்தாளர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
- எம். மூர்த்தி, பி. காம்,தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment