புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காவலர் குடியிருப்பு அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு அவர்களுக்கும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் அவர்களுக்கும் காவலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னமராவதியில் கடந்த 30 ஆண்டுகளாக காவலர் குடியிருப்பு இல்லாமல் வெளியூரிலிருந்து இப்குதியில் பணியாற்றிவரும் ஆண், பெண் காவலர்கள் மிகவும் அவதியுற்று வருவதுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர். மேலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த காவலர் குடியிருப்பு இடிக்கப்பட்டு இது நாள் வரை அங்கு காவலர் குடியிருப்பு கட்டப்படவில்லை என்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காவல் துறையினர் மீது பேரன்பு கொண்டு பொன்னமராவதி பகுதியில் காவலர் குடியிருப்பு அமைத்து கொடுத்து உதவிட வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. செய்தியாளர், புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment