இந்த பேருந்து நிலையத்திற்கு தினசரி புதுக் கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். அதிக பேருந்துகள், அதிக பயணிகள் வந்துசெல்லும் இந்த பேருந்து நிலையம் மிகச்சிறிய அளவில் உள் ளது. இதனால் பேருந்துகள் வந்து செல்லவும், பயணிகள் வந்து செல்லவும் இது போதுமானதாக இல்லை.
இதனால் பேருந்து நிலையத்தில் ஒரு சில நேரங்களில் அதிக பேருன் துகள் ஒரே நேரத்தில் வந்து செல்வதால் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகின்றது. தமிழகத்தின் தனிச்சிறப் பாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் சந்தை நடப்பது பொன்னமராவதியில் மட் டும் தான். பேருந்து நிலை யத்தின் அருகில் சனி மற்றும் செவ்வாய்கிழமை சந்தை நடப்பதால் சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனம்நங்கள், கார்கள் போன்ற வாகனங்கள் பேருந்து நிலையங்களில் நிறுத்தப்படுவதால் அதிக நெருக்கடி ஏற்படுகிறது.

இதனால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கிடையே இந்த பேரூந்துநிலையில் மாடுகள், நாய்கள் தொல்லையும் அதிகம் உள்ளது. திருமயம், திருப்பத்தூர், பொன்னமராவதி, எஸ்.புதூர், மருங்காபுரி ஆகிய ஒன்றிய பகுதிகளை சேர்ந்த - வர்கள் ஜவுளிக்கடை, காய்கள், மளிகை, அரசு அலு வலகங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள் பொன்னம ராவதியில் உள்ளதால் தின சரி மக்கள் இந்த பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.
எனவே பயணிகள் மற்றும் பேருந்துகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக பொன்னமராவதி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என பொதுமக்கள், மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அவர்கள் தலையிட்டு பெரும் விபத்து நடக்கும் முன் பொன்னமராவதி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. செய்தியாளர், புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment