மாதந்தோறும் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் வானவில் மன்றத்தில் போட்டிகள் நடத்தப்பெற்று மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பெற்று அவர்களின் அறிவியல் திறன்களை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதத்திற்கான வட்டார அளவிலான வானவில் மன்றப் போட்டி, அன்றாட வாழ்வில் ஒளி என்னும் கருப்பொருளில், பொன்னமராவதி வட்டார வளமையத்தில் நடைபெற்றது. மாணவர்கள் அன்றாட வாழ்வில் ஒளியின் பயன்பாடுகள் குறித்து அறிவியல் பூர்வமாகச் செய்து விளக்கினர். நிகழ்வை வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி சே.இராமதிலகம் அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்.
வானவில் மன்ற மாநிலக் கருத்தாளரும், எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய திரு சி.ராஜா அவர்கள் முன்னிலை வகித்தார், வானவில் மன்ற நடுவர்களாக, வானவில் மன்றக் கருத்தாளர்களான ப.அப்ரின்பானு, மா.காவியா மற்றும் மயிலாப்பூர் P.U.M.S தலைமை ஆசிரியை திருமதி வெண்ணிலா ஆகியோர் செயல்பட்டனர். மாவட்ட அளவிலான வானவில் மன்றப் போட்டிக்கு மைலாப்பூர் அரசு நடுநிலைப்பள்ளி, பொன் .புதுப்பட்டி அரசு பெண்கள்.மே.நி.பள்ளி, மேலைச்சிவபுரி அரசு.மே.நி.பள்ளி மாணவ, மாணவியர் தேர்வாகியுள்ளனர்.
வானவில் மன்றப் போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) திருமதி நல்லநாகு, ஆலவயல் அரசு மே.நி.பள்ளி ஆசிரியர் முனைவர் சி.ஞானமணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
- செய்தியாளர் மு. மூர்த்தி, பி. காம்,. புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment