புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவி பிராத்தனா-விற்கு பரத நாட்டிய மங்கை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.உலக மகிழ்ச்சி தினத்தையொட்டி அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஸ்ரீ பிரசன்னா சரவணன் தலைமையில் சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா முன்னிலையில் சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ பிரசன்னா சரவணன், செயலாளர் அன்புச்செல்வன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு மெடல் மற்றும் பாராட்டு நற்சான்றிதழை வழங்கி வெகுவாகப் பாராட்டினர்.

மேலும் சமீபத்தில் இப்பள்ளியில் நடைபெற்ற ஐந்தாமாண்டு ஆண்டுவிழா நிகழ்ச்சியில் மண் பாண்டத்தில் பரத நாட்டியம் ஆடி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்த ஐந்தாம் வகுப்பு மாணவி பிராத்தனா-விற்கு "பரத நாட்டிய மங்கை விருதினை" அப்துல்கலாம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ பிரசன்னா சரவணன், செயலாளர் அன்புச்செல்வன் ஆகியோர் வழங்கி ஊக்குவித்தனர். இந்நிகழ்வில் அப்பள்ளி இடைநிலை ஆசிரியர் இருதயராஜ் லியோ, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் புவனேஸ்வரி, ஆசிரியர்கள், அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை வெகுவாகப் பாராட்டினர்.
- செய்தியாளர் மு. மூர்த்தி, பி. காம்,. புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment