பொன்னமராவதியில் புதுக்கோட்டை மாவட்ட கால்நடை மற்றும் பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகம் இணைந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட மண்டல இணை இயக்குனர் டாக்டர் சம்பத் அறிவுறுத்தல்படி இலுப்பூர் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் டாக்டர் பாபு ஆலோசனையின்படி பொன்னமராவதி கால்நடை மருத்துவமனையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை தாங்கினார்.

பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் கால்நடை மருத்துவர்கள் ராவியத்துள் பசரியா, பிரேம்குமார், முத்துக்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 50க்கு மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசியை செலுத்தினர். மேலும் செல்லப்பிராணிகளை எவ்வாறு பராமரிப்பது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கினர்.
இம்முகாமில் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் குமரேசன், கால்நடை ஆய்வாளர் தயாநந்த ராவ், கால்நடை உதவியாளர் முருகன், ராமசாமி, உள்ளிட்ட பலர் உடனிருந்து உதவினர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment