வேகுப்பட்டி ஊராட்சியில் தொடர் மின் வெட்டு மின் பணியாளர் நியமிக்க பொன்னமராவதி மின்சார வாரியத்திற்கு வேகுப்பட்டி ஊர் பொது மக்கள் வேண்டுகோள்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சிக்கு மின் பணியாளர் நியமனம் செய்ய வேண்டுமென பொன்னமராவதி மின்சார வாரியத்திற்கு வேகுப்பட்டி ஊர் பொது மக்கள் கோரிக்கை.வேகுப்பட்டி ஊராட்சியில் நேற்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 6 வரை ஏற்பட்ட மின் நிறுத்தத்தால் இப்பகுதி மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும்.

வேகுப்பட்டி ஊராட்சியில் அடிக்கடி மின்சார பாதிப்பு உள்ளதாகவும். பாதிப்பை சரி செய்ய வேகப்பட்டி ஊராட்சிக்கு நிரந்தரமாக ஒரு மின் பணியாளரை நியமனம் செய்ய வேண்டும் என்று பொன்னமராவதி மின்சார வாரியத்திற்கு வேகுப்பட்டி ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment