திருச்சி சரக காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்படி துணைத் தலைவர் சரவண சுந்தர் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆலோசனையின்படி இலுப்பூர் டிஎஸ்பி டாக்டர் காயத்திரி தலைமையிலான காரையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் காவலர்கள் அரசமலை பகுதியிலுள்ள செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களிடம் தங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் உள்ளதா என்று நேரில் சென்று கருத்துக்களை கேட்டறிந்தனர்.
மேலும் காவல்துறையின் கேள்விகளுக்கு பதிலளித்த வடமாநில தொழிலாளர்கள் பேசுகையில் இப்பகுதி எங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற இடமாகவும் இங்குள்ள மக்கள் எங்களிடம் அன்பாகவும், தங்களின் ஒருவராக பார்ப்பதாகவும் பெருமையுடன் கூறினர். அதேபோன்று வட மாநிலத்தவர்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு காவல்துறையின் दूसरे राज्यों के प्रवासी श्रमकि तमलिनाडु पुलसि के हेल्पलाईन नम्बरों पर संपर्क कर सकते हैं 0421-2203313, 9498101300, 9498101320 உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என வட மாநில தொழிலாளர்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இவ்விழிப்புணர்வில் வெண்ணிலா, சரவணன், மணிகண்டன் உட்பட பல காவலர்கள் உடனிருந்தனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment