கொப்பனாபட்டி ஊராட்சியில் திருவிழாக்கடை மகமை ஏலம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 4 March 2023

கொப்பனாபட்டி ஊராட்சியில் திருவிழாக்கடை மகமை ஏலம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி ஊராட்சி கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாக்கடை மகமை ஏலம் ஊராட்சி பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற சேவைமைய கட்டிடத்தில் நடைபெற்றது.ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் ரூபாய் 2000 வைப்புத் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர்.


இந்த ஏலத்தில் கொப்பனாபட்டியில் தினசரி கடை, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாக்கடை, புளியமர மேம்பாலம், ஆண்கள் சுகாதார வளாகம், பெண்கள் சுகாதார வளாகம் உள்ளிட்டவைகள் கொப்பனாபட்டி ஊராட்சி மன்றம் சார்பில் ஏலம் விடப்பட்டது.இந்த  ஏலமானது பொன்னமராவதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கற்புக்கரசி மற்றும் கொப்பனாட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா மகேசுவரன் முன்னிலையில் நடைபெற்றது.


ஏலத்தில் பங்கேற்றவர்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். ஆண்கள் சுகாதார வளாகம் மற்றும் பெண்கள் சுகாதார வளாகம் சுய உதவிக்குழுவினற்கு ஏலம் மூலம் வழங்கப்பட்டது. இந்த ஏலத்தில் ஊராட்சி செயலாளர் ஸ்ரீ கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் வேலாயுதம், சீமாட்டி லத்தீப், மோகனா சேகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad