ஆர்.பாலகுறிச்சியில் முத்துமாரியம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூத்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்.பாலகுறிச்சி மட்டும்மின்றி சுற்றியுள்ள வைரம்பட்டி, வெடத்தளம்பட்டி, ரெகுநாதபட்டி, சீகம்பட்டி, கோபால்ப்பட்டி அகிய கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து வந்து முத்துமாரியம்மனை வழிபட்டனர்.

விழாவில் பொன்னமராவதி, கிழவயல், கட்டுக்குடிபட்டி, கேசம்பட்டி, புழுதிபட்டி, உலகம்பட்டி, புதூர், வாராப்பூர் ஆகிய ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றானர். முத்துமாரியம்மனுக்கு பூசகர் சொக்கலிங்கம் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment