ஒவ்வொரு மாதமும் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் வினாடி, வினாப் போட்டி அரசுப் பள்ளிகளில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்கான வட்டார அளவிலான வினாடி வினா போட்டி இன்று பொன்னமராவதி வட்டார வளமையத்தில் நடைபெற்றது.

வினாடி வினா போட்டியில் திருக்களம்பூர் அரசு உ.நி.பள்ளி, பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மே.நி.பள்ளி ஆகிய பள்ளிகள் மாவட்ட அளவிலான தேன்சிட்டு இதழ் வினாடி வினா போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன. வினாடி வினா போட்டியில் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி சே.இராமதிலகம் தலைமை வகித்தார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) திருமதி பழ.நல்லநாகு, ஆலவயல் அரசு மே.நி.பள்ளி ஆசிரியர் முனைவர் சி.ஞானமணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர். போட்டியின் நடுவர்களாக P.U.M S கண்டியாநத்தம் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி யு.சுபத்ரா, திருக்களம்பூர் அ.உ.நி.பள்ளி ஆசிரியை திருமதி சாந்தாபேகம், P.U.M.S வாழைக்குறிச்சி ஆசிரியை திருமதி செல்வி ஆகியோர் செயல்பட்டனர்.
- எம். மூர்த்தி, பி. காம், தமிழக குரல்,புதுகை,மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment