புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. வேகுப்பட்டி ஊராட்சியில் வேகுப்பட்டி நகரத்தார் டாக்டர்ஸ் அசோசியேசன் இந்தியா, வேகுப்பட்டி நகரத்தார்கள், வேகுப்பட்டி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமில் பொது மருத்துவர் டாக்டர் சேதுராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அப்பகுதி பொது மக்களுக்கு ,காய்ச்சல், உடல் வெப்ப நிலை, சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், கண் மருத்துவம், எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், இருதய மருத்துவர் பல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

இம்முகாமில் இதில் பதினைந்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள், வேகுப்பட்டி நகரத்தார்கள், வேகுப்பட்டி நாட்டார் மற்றும் ஊர் பொது மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி கவுன்சிலர், செவிலியர்கள், பணியாளர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உடனிருந்து உதவினர். இதில் 350க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர்,புதுக்கோட்டை.
No comments:
Post a Comment