பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் புதிய பாரத கற்போருக்கு வாழ்வியல் திறன் பயிற்சி. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 3 March 2023

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் புதிய பாரத கற்போருக்கு வாழ்வியல் திறன் பயிற்சி.


மணமேல்குடி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலஸ்தானத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் புதிய பாரத கற்போருக்கு வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் புதிய பாரத  எழுத்தறிவுத் திட்ட கற்போருக்கு வாழ்வில் திறன் பயிற்சியானது வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு  திருமதி சிவயோகம் தலைமையில் தொடங்கியது.


பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி வாசுகி அவர்கள்* அனைவரையும் வரவேற்று பேசினார், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்தும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களின் வருகையினை  உறுதி செய்து அவர்களுக்கு தினமும் கற்றல் கற்பித்தலில் நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் தேவைப்படும் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.


மேலும் இந்நிகழ்வில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கு வாழ்வில் திறன் திறன் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் ஊர்காவல் படை படைத்தளபதி மு.ஹாஜி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை  குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சாலை பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை குறித்தும் விரிவான விளக்கம் அளித்தார்.  


பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை மற்றும் சிலம்பம் போன்ற கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எல்லா பள்ளிகளில் கல்வி சீர் வழங்கும் விழாக்கள்  நடத்தி பள்ளிக்கு தேவையான வளங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சித்ரா, ஜெசிந்நா நௌலின், மலர்விழி மற்றும் பெனிலா இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்  கண்னண், புதுக்கோட்டை மாவட்டம் ஊர்காவல் படை  உதவி படைத்தளபதி சே.சிவபாண்டியன் ஊர்காவல் படைவீரர் பழனிமுத்து  மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad