
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்றும் உடல் நலத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்வதன் வழியாகவும் இயன் முறை மருத்துவப் பயிற்சி வழங்குவது மூலமாகவும் குறைபாடுகளை தவிர்க்க முடியும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்தும் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாற்றுத்திறன் கொண்ட பெற்றோர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர் அங்கயர் கன்னி இயன்முறை மருத்துவர் செல்வகுமார் சிறப்பாசிரியர்கள் மணிமேகலை கோவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment