புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் சார்பில் ஆசிரியர்களுக்கு சிகரத்தை தொட சிலேட்டை என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இப்பேச்சுப்போட்டியில் கணேசர் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர். கதி.முருகேசன்,லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சிட்டா, வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் தெய்வானை ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல் புதுக்கோட்டை மாவட்ட, செய்தியாளர்
No comments:
Post a Comment