புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் வேகுப்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் மெ. அர்ச்சுணன், தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது,ஊராட்சி துணை தலைவர், பெரி. முத்து, ஊராட்சி உறுப்பினர்கள் ச. செல்வி, கு. தேன்மொழி, மு. கணேசன், ந. அழகி, ஊராட்சி செயலர் சுப.சங்கர், M. பழனியாயி, MGNREGS திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில், கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம் ) சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறித்த விழிப்புணர்வு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம வளர்ச்சி திட்டம், (VPDP) ஜல் ஜீவன் இயக்கம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பாரத்நெட் இணையதள வசதி மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் அளவளந்தான் கண்மாயின் பாசன வாய்க்கால்கள் தூர்வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அளவளந்தான் கண்மாய் கரையில் சாலை அமைக்க பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நீ. வ. து தெற்கு வெள்ளாறு வடிநில கோட்டம், புதுக்கோட்டை அவர்களிடம் ஊராட்சியின் மூலம் விண்ணப்பித்து தடையின்மை சான்று பெற்று ஊராட்சி நிர்வாத்தின் மூலம், ஊராட்சி நிதியில் சாலை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உலக தண்ணீர் தின கிராம சபைக் கூட்டத்திற்கு ஊர் பொதுமக்களும், சுயஉதவிக்குழு உறுப்பினர்களும், பிற துறை அலுவலர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,.தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment