விழாவில் தலைமையாசிரியர் திருமதி வாசுகி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எண்ணும் எழுத்தும் சிறு கண்ணோட்டம் பற்றி திருமதி பெனிலா அவர்கள் உரையாற்றினார். வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பெற்றோர்கள் எண்ணும் எழுத்தும் கண்காட்சியை கண்டனர்.

மாணவர்களின் படைப்புகளையும் கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிகளில் மாணவர்களோடு பெற்றோர்களும் மகிழ்வோடு கலந்து கொண்டனர். விழாவில் ஆசிரியர்கள் சித்ரா, மலர்விழி, கற்பகம், கார்த்தீஸ்வரி, சத்துணவு அமைப்பாளர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
எண்ணும் எழுத்தும் சுயபடப்பலகையில் மாணவர்களும் பெற்றோர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருமதி ஜெசிந்தா அவர்கள் நன்றி உரை வழங்க விழா நிறைவடைந்தது.
எம். மூர்த்தி, பி. காம்,.தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment