புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் என்னும் எழுத்தும் கொண்டாட்டங்கள் என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடைபெற்ற என்னும் எழுத்தும் கொண்டாட்டங்கள் என்ற கருத்தரங்கு அப்பள்ளி தலைமையாசிரியர் சுபத்ரா தலைமையில் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களின் கலந்தாய் கூட்டம் நடத்தினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல் சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சங்கர், பள்ளி மேலாண்மை குழு தலைவி யசோதா, ஆசிரியர்கள் சத்யா, கலைவாணி, கீதா, இளையராணி, கலைச்செல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment