புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூத்திருவிழா, அக்னி பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா பக்தர்களின் வேண்டுதலுடன் மிக நேர்த்தியாக நடைபெற்று வருகிறது கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியதையொட்டி 50-ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களின் வேண்டுதலுடன் பூத்தட்டு எடுத்தல், அக்னி பால்குடம், பூக்குழி இறங்குதல் என பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேலும் இப்பூத்திருவிழாவில் சுற்றுவட்ட ஊர் பொது மக்கள், பக்தகோடி பெருமக்கள், இளைஞர்கள் என 50- ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழா பாதுகாப்பிற்கு காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை, மின்சார துறை என பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு பணிகளை முழு வீச்சில் செய்துவந்தனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.

No comments:
Post a Comment