மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட 36 மையங்களில் கற்போருக்கு மதிப்பீடு நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 19 March 2023

மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட 36 மையங்களில் கற்போருக்கு மதிப்பீடு நடைபெற்றது.


மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 36 மையங்களில் 642 கற்போருக்கு மதிப்பீடு இன்று நடைபெற்றது. இம்மதிப்பீட்டில் தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளராகவும் மற்றும் தன்னார்வலர்கள் அறை கண்காணிப்பாளராகவும் செயல்பட்டார்கள். தேர்வானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கற்போர் வசதிக்கேற்ப மையங்களிலும் இல்லங்களிலும் நேரடியாக மதிப்பீடு நடைபெற்றது. 

இந்நிகழ்வினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் மதிப்புக்குரிய திருசெழியன் மற்றும் திருமதி இந்திராணி மணமேல்குடி வட்டார வள மைய  மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம்  ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி அங்கையர் கன்னி ஆகியோர் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட அனைத்து மையங்களையும் பார்வையிட்டனர்.


இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் கற்போர்கள் அனைவரும் ஆர்வத்துடன்  கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, மாவட்ட செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad