புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

மேற்கண்ட வேலைவாய்ப்பு முகாமில்,சென்னை, கோவை, கிருஷ்ணகிரி ஓசூர் புதுக்கோட்டை, விராலிமலை, திருச்சி போன்ற ஊர்களில் உள்ள நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (11.03.2023) வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப, அவர்கள், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திரு.இர.தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திருமதி.திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர் புதுக்கோட்டை.
No comments:
Post a Comment