தொட்டியம்பட்டி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தொட்டியம்பட்டி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 600 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் தொட்டியம்பட்டி ஊராட்சித் தலைவர் கீதா சோலையப்பன் தலைமையில் துணைத்தலைவர் சாமிநாதன் முன்னிலையில் 600 தென்னை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வழங்கினார்.இதில் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலர், வேளாண் உதவி அலுவலர் உள்ளிட்ட பலர் உடனிருந்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. -
No comments:
Post a Comment