புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 16 வயதுக்குட்பட்டவர்கள் அரசு நிவாரண நிதி பெற விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த 16 வயதுக்குட்பட்டவர்கள் அரசு நிவாரண நிதி உதவித்தொகையான ரூ.3 லட்சம் பெற இதுவரை விண்ணப்பித்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 22.ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் முன்னாள் படை வீரர் நல அலுவலக வளாகம் திருக்கோகர்ணம் ரோடு புதுக்கோட்டை என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்குமாறும். மேலும் விபரங்கள் பெற 04322-6369031924 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பு அரசு ஊழியர் குடும்பத்தினர் இதற்கு முயற்சிக்க வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது.
- எம். மூர்த்தி, தமிழக குரல்,புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment