
தலைமையாசிரியர் அல்போன்ஸா அனைவரையும் வரவேற்று பேசினார். இடைநிலை ஆசிரியர் அன்னாள் நிர்மலா ஆண்டறிக்கையை வாசித்தார். பேரூராட்சி கவுன்சிலர் ராஜா, கல்வியாளர், ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் கருப்பையா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சீதா,உள்ளாட்சி பிரதிநிதி கணேசன், ஆசிரியப் பயிற்றுநர் கவிதா ஆகியோர் சிறப்புரையாற்றினார். பின்பு முறையாக தொடங்கிய மாணவிகளின் கலை நிகழ்ச்சியினை இடைநிலை ஆசிரியர் முத்துக்கனி தொகுத்து வழங்கினார்.
முன்னதாக நடைபெற்றற பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் அல்போன்சா பரிசுகளை வழங்கி பாராட்டினார். இப்பள்ளி ஆண்டு விழாவினை இடைநிலை ஆசிரியர்கள் அமுதா, பாலசுப்ரமணியன் ஒருங்கிணைப்பு செய்தனர். இந்நிகழ்வில் மு.சு.மூக்கையா பாண்டியன், டாக்டர் சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஜெய் பழனியப்பன், பிடபிள்யு வெங்கடேசன், வெள்ளைச்சாமி, சங்கர் மெமோரியல் டிரஸ்ட் குழுவினர், பொறியாளர் துரைராஜ், நந்தினி அச்சகம், நடன இயக்குநர் கணேச மூர்த்தி மற்றும் அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மையம், இல்லம் தேடி தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கலந்து சிறப்பித்த அனைவரும் ஆசிரியர் அமுதா நன்றியுரை வழங்கினார்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment