உலக மகளிர் தினத்தையொட்டி காரையூர் மொ.அ.கா. அரசு மேல்நிலைப்பள்ளியில் திருச்சி சரக காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்படி துணைத் தலைவர் சரவண சுந்தர் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆலோசனையின்படி இலுப்பூர் டிஎஸ்பி டாக்டர் காயத்திரி தலைமையிலான காரையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாத்தி மற்றும் தலைமைக்காவலர் விஜயலட்சுமி, இரண்டாம் நிலை பெண் காவலர் வாசுகி, அருணா தேவி ஆகியோர் மாணவிகளுக்கு குழந்தைகளுக்கான சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது,பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098, பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடையே விளக்கி கூறினார்.

மேலும் 1098 சைல்டு லைன் சார்பில் பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி மாணவிகளிடையே திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல்,குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல் பற்றிய விழிப்புணர்வை வழங்கினார். இந்நிகழ்வில் அப்பள்ளி தலைமையாசிரியர் தாமஸ் ராஜகுமார், தமிழ் பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி, அரசு ஆதி திராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி காப்பாளர் தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என 183க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment