மாணவர்களின் அறிவியல் சார்ந்த தனித்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அன்றாட வாழ்வில் காற்றழுத்தம், அன்றாட வாழ்வில் வெப்பம், அன்றாட வாழ்வில் வேதியியல், அன்றாட வாழ்வில் ஒளி ஆகிய கருப்பொருள்களில் வானவில் மன்றப் போட்டிகள் பொன்னமராவதி வட்டார வளமையத்தில் நடைபெற்றது.

இப்போட்டியை வட்டாரக்கல்வி அலுவலர் சே.இராமதிலகம் தலைமை ஏற்றுத்தொடங்கி வைத்தார். நடுவர்களாக ஆலவயல் அரசு மே.நி.பள்ளி அறிவியல்ஆசிரியர் சை.இ.கயூம், ஆலம்பட்டி ஊ.ஒ.ந.நி பள்ளி அறிவியல் ஆசிரியர் மருதபாண்டி, கொன்னையம்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி ஆசிரியர் செ.மாணிக்கம், வானவில் மன்றக் கருத்தாளர்கள் ப.அஃப்ரின்பானு, மா.காவியா ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) நல்லநாகு, ஆலவயல் அரசு மே.நி.பள்ளி ஆசிரியர் முனைவர் சி.ஞானமணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் முகமது ஆசாத் ஆகியோர் செய்திருந்தனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல் மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment