பொன்னமராவதியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 8 February 2023

பொன்னமராவதியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.பொன்னமராவதி காந்திசிலை அருகில் நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் கண்ணா கருப்பையா,கோட்ட கலால் வருவாய் ஆய்வாளர் முருகேசன், வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சேகர்,போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கிய போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர், மதுப்பழக்கத்தை தவிர்ப்பீர், புத்துணர்ச்சி பெறுவீர், போதை இல்லா வாழ்க்கை அமைப்பீர், வாழ்கையில் ஏற்றம் பெருவீர் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையிலேந்தி  முக்கிய சாலை வழியாக பேரணியாக சென்று பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் போதை பழக்கத்திற்கு எதிராக முதியோர்கள், இளைஞர்கள் மது அருந்துவதம்,மது அருந்திவிட்டு வானம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துகளின் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல்களை பாடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


இவ்விழிப்புணர்வில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், காவல்துறையினர், பேரூராட்சி துறையினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 


- எம் .மூர்த்தி,தமிழக குரல், புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad