புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூர் ஊராட்சியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பணிகளின் இணை மற்றும் துணை இயக்குனர்கள் அறிவுறுத்தலின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின்படி திருக்களம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பையா தலைமையில் வட்டார தொழுநோய் மேற்பார்வை மோசஸ் தலைமையிலான சுகாதார குழுவினர் திருக்களாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொழுநோய் ஆரம்ப அறிகுறிகள், தீவிரதொற்று மற்றும் சிகிச்சைகள் குறித்தும்,டெங்கு காய்ச்சல் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி நல்ல தண்ணீரில் உருவாகும் லார்வா தடுப்பு முறைகள் மற்றும் காய்ச்சல் சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறினர்.
இதில் அப்பள்ளி ஆசிரியர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என ஐம்பதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment