பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவினை மிகச் சிறப்பாக பணியாற்றி மாணவர்களுக்கும் ஊக்கம் தந்து மாவட்ட அளவில் பல பள்ளிகள் முதலிடம் பெற்றிருந்தது.
அதில் மாநில அளவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி மாணவி அன்னபூரணி வயலின் வாசித்தலில் இரண்டாம் இடம் பெற்றிருந்தார். மணமேல்குடி ஒன்றிய பெரும் தலைவர் மதிப்புக்குரிய திரு. பரணி கார்த்திகேயன் அவர்களால் பாராட்டப்பட்ட நிகழ்வு. தேசிய அளவிலும் மாநில அளவிலும் விளையாட்டில் சிறந்து விளங்கிய புதுக்குடி மாணவர் அவர்களுக்கும் ஜே ஆர் சி யில் இந்திய அளவில் பங்கேற்று சிறப்பித்த பொன்னகரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
- எம். மூர்த்தி, தமிழக குரல்.புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment