புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திரு சே மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு எழுதுப்பொருட்கள் வழங்க நிகழ்வு மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு.செழியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் புதிய பாரத தன்னார்வலர்களிடம் எழுத படிக்க தெரியாத கற்போருக்கு தினமும் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்றும், கற்போர் தங்களுடைய பெயர் தங்களுடைய ஊர் பெயர் எழுதப் படிக்க கையெழுத்து போடுவதற்கு பயிற்சி தினமும் வழங்க வேண்டும் என்றும், கற்போர் வருகையினை தினமும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மற்றும் வாழ்வியல் திறன்களையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மணமேல்குடி ஒன்றியத்தில் 36 புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்கள் உள்ளது. மையங்களுக்கு தேவையான புத்தகங்கள் ,ஸ்லேட் நோட்டு, வருகை பதிவேடு, குச்சி மற்றும் பேனா போன்றவை 36 மையங்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் முத்து ராமன் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் சிறப்பாசிரியர்கள் மணிமேகலை கோவேந்தன் மற்றும் 36 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை மாவட்ட தமிழக குரல் செய்தியாளர் எம். மூர்த்தி.
No comments:
Post a Comment