புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா,கோட்டூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 1 February 2023

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா,கோட்டூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா,பனையபட்டி அருகே உள்ள கோட்டூர் ஊராட்சியில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கோட்டூர் ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடத்தப்பட்ட கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் புதுக்கோட்டை மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நச்சாந்துப்பட்டி கால்நடை மருந்தகத்தின் சார்பில் தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நச்சாந்துப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் நித்யா தேவி, மருத்துவர் மோகனப்பிரியா, கால்நடை ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுற்றுவட்ட பகுதியில் உள்ள நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, தோல் கழலை நோய்க்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், கோழிகளுக்கு ரத்த கழிச்சல் தடுப்பூசி, மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, சுண்டு கால்வாத அறுவை சிகிச்சை ஆகிய சிகிச்சை பணிகள் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. 


மேலும் கால்நடைகளுக்கு தோல் கழலை ( பெரியம்மை நோய்)  நோய்களைப் பற்றிய மேலாண்மை, கால்நடை வளர்ப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள்,தாது உப்புக்கள், சிறந்த கன்று பராமரிப்பு மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்பிற்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கோட்டூர் ஊராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்து உதவினர்.

No comments:

Post a Comment

Post Top Ad