திருக்களம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவைச்சார்ந்த மகளிருக்கு பொருளாதார மேம்பாட்டுத்திட்ட கடன் மூலம் 4 சதவீத வட்டியில் கீற்றுமுடையும் தொழிலுக்காக திருக்களம்பூர் ஸ்ரீகருப்பர் மகளிர் சுய உதவிக்குழு, திருக்களம்பூர் ஸ்ரீகற்பகவிநாயகா மகளிர்சுய உதவிக்குழு, கருதங்கோடப்பட்டி ஸ்ரீநவசக்தி விநாயகர் சுய உதவிக்குழு, கருதங்கோடப்பட்டி ஸ்ரீ விநாயகர் சுய உதவிக்குழு ஆகிய நான்கு குழுக்களுக்கு தலா ரூ 600000/ வீதம் ரூ 2400000/ வழங்கப்பட்டது கடன் தொகைக்கான வங்கிக்கணக்கு புத்தகத்தை சங்கத்தின் தலைவர் திரு செ.இராஜமாணிக்கம் வழங்கினார். இயக்குநர்கள் நெ.இராமச்சந்திரன், இராம. கருப்பையா சங்கச்செயலாளர் கோ.துரையரசன் ,பணியாளர்கள் பெருமாள் ,மணி மற்றும் மகளிர்சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment