தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ஆகியோருக்கு SNA அரை நாள் பயிற்சி. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 26 January 2023

தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ஆகியோருக்கு SNA அரை நாள் பயிற்சி.


மணமேல்குடி ஒன்றியத்தில் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ஆகியோருக்கு SNA  அரை நாள் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை துணைத்தலைவர்கள் ஆகியோருக்கு மூன்று கட்டங்களாக அரை நாள் மானியம் சார்ந்த SNA பயிற்சி வழங்கப்பட்டது.


இப் பயிற்சி இனி மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திருமதி இந்திராணி  அவர்களின் தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார்.


இப்பயிற்சியில்  மானியம் தொடர்பான  செலவினங்களை மேற்கொள்ளும் முறைகள் குறித்தும் ஒவ்வொரு  செலவினங்கள் மேற்கொள்ளும் போதும் தீர்மானங்கள் எழுதப்பட வேண்டும் என்றும்  செலவினங்கள் மேற்கொள்ளும் போது அதற்குரிய பற்று சீட்டுகள் செலவினங்களின் விவரங்கள் எவ்வாறு மேற்கொள்வது பற்றியும் விரிவாக பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை ஒன்றிய கணக்காளர் திரு கலைச்செல்வன் அவர்கள் வழங்கினார். 


- எம். மூர்த்தி, மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad