புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காந்திசிலை முன்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சேகர் மற்றும் காவல் ஆய்வாளர் தனபாலன், போக்குவரத்து காவலர் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கிய தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, 18 வயது நிறைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும், தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை கையிலேந்தி முக்கிய சாலை வீதியான அண்ணா சாலை, பேருந்து நிலைய வளாகம் வழியாக பேரணியாக சென்று காவல் நிலையம் அருகில் பேரணியை நிறைவு செய்தனர்.
இந்நிகழ்வில் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், காவல்துறையினர், கிராம நிர்வாக உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் எம். மூர்த்தி.
No comments:
Post a Comment