தமிழகத்திலேயே முதன்முதலாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி தச்சன் குறிச்சியில் ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு 02.01.2023 அன்று நடைபெற வேண்டியது போதிய முன்னேற்பாடுகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகத்தால் 06.01.2023 இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நடக்க வேண்டிய ஜல்லிக்கட்டு திடீரென்று மீண்டும் மாடுகளும் மாடு பிடி வீரர்களும் ஆன்லைன்னில் பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு செய்ய விலை என்பதை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாது என்று அறிவித்தது.
உடனே பொதுமக்கள் ஊர் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள், இன்று சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட நிர்வாகம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேன் அவர்கள்,பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் வரும் 08/01/2023 ஞாயிறு அன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்தார். ஊர் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டனர்.
No comments:
Post a Comment