குண்டும் குழியுமான சாலையினை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 6 January 2023

குண்டும் குழியுமான சாலையினை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள  ஆலவயல்-கண்டியாநத்தம் கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையினை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டியாநத்தம் கிராமத்திலிருந்து ஆலவயல் வரை கடந்த 2020ஆம் ஆண்டு கடைசியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்டது. 


இச்சாலை போட்டு ஒரு மாத்திற்குள் தார்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக ஆனது இதே போல இந்த சாலையின் தொடர்ச்சியாக கண்டியாநத்தம் உலகம்பட்டி செல்லும் சாலையும் இதே வருடத்தில் போடப்பட்டது.போட்ட சாலைகள் ஒரு சில மாதங்கள் கூட நிலைக்கவில்லை. இந்த சாலை வழியாக அரசு பேரூந்துகள், பள்ளி வாகனங்கள், மற்ற வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலை தற்போது அதிக அளவு குண்டும் குழியுமாக கிடக்கின்றது. 


இந்த சாலை வழியாக ஆலவயல் மற்றும் உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ,மாணவிகள் குண்டும் குழியுமான இந்த சாலையில் பெரும் சிரமத்துடன் சைக்களில் சென்று வருகின்றன. ஒரு சில மாணவர்கள் விழுந்து செல்லும் நிலையும் உள்ளது. மழைபெய்தால் இச்சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த சாலையினை புதிதாக போட்டு  நல்ல போக்கவரத்துக்கு செல்லும் சாலையாக அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad