தனியார் மருத்துவமனை சார்பில் க.புதுப்பட்டி கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 7 January 2023

தனியார் மருத்துவமனை சார்பில் க.புதுப்பட்டி கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சி க.புதுப்பட்டி கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. க.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

ஸ்ரீ துர்கா மருத்துவமனையின் இலவச பொது மருத்துவ முகாம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி முருகேசன் தலைமையில் துணைத்தலைவர் ரோஜா பானு முன்னிலையில் தொடங்கியது. இம்மருத்துவமுகாமில் பொன்னமராவதி ஸ்ரீ துர்கா மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் செல்வக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரை வழங்கினர்.


இதில் ஸ்ரீ துர்கா மருத்துவமனையின் செவிலியர்கள், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சிதலைவர் கருப்பையா, வழக்கறிஞர் பாண்டி, தனபால், வார்டு உறுப்பினர்கள் அழகப்பன், சரோஜாதேவி, மகபத்நிசா, ஊராட்சி செயலாளர் அழகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad