புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் இனிதே நிறைவடைந்தது, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை 08/01/2023 இன்று காலை 8.30 மணியளவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள், சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யாநாதன் இருவரும் துவக்கி வைத்தனர், மொத்தம் 500 காளைகளும், 235 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர், மொத்தமாக 485 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது, ஒரு சுற்றுக்கு 25 மாடுபிடி வீரர்கள் வீதம் களம் கண்டனர்.
மொத்தம் 17 காளைகளை தழுவி இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசான இருசக்கர மோட்டார் வாகனத்தை புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் தட்டிச் சென்றார்.
No comments:
Post a Comment